Photos
#VDay14
Fact 1 - A healthy relationship makes you feel good
No relationship is perfect all the time. But in a healthy relationship, both people feel good about the relationship (and themselves) most of the time. Open communication, loving yourself, honesty, mutual respect, giving each other space, forgiveness and support are some vital ingredients for a healthy relationship.
1වන කරුණ - හිතකර සබඳතාව ඔබ සතුටින් තබය
කිසිදු සබඳතාවක් සෑම කල් හි ම සර්ව-සම්පූර්ණ නැත. නමුත්, හිතකර සබඳතාවක් ඇති තැන, නිතරම පාහේ දෙදෙනාම එම සබඳතාව (සහ තම තමන්) ගැන සතුටින් පසුවෙති. විවෘත කතා-බහ, තම තමන්ට ආදරය කිරීම, අවංක බව, එකිනෙකාට ගරු කිරීම, එකිනෙකාගේ නිදහසට බාධා නොකිරීම, සමාව දීම සහ සහය පළ කිරීම යනු හිතකර සබඳතාවකට අවශ්ය වැදගත් දෑ අතරින් සමහරකි.
உண்மை 1 – ஆரோக்கியமான உறவு உங்களை மகிழ்விக்கும்
உறவுகள் எப்போதுமே முழுநிறைவானதாக இருப்பதில்லை. எனினும், உறவு ஆரோக்கியமாக இருந்தால், அநேகமான சந்தர்ப்பங்களில் இரு தரப்பினருமே அந்த உறவு குறித்தும் தம்மை குறித்தும் திருப்தி மற்றும் மகிழ்ச்சியை உணர்வார்கள். உறவு ஆரோக்கியமானதாக அமைவதற்கு வெளிப்படையான தொடர்பாடல், தன்னைத் தானே நேசித்தல், நேர்மை, பரஸ்பர மரியாதை, ஒருவர் கருத்திற்கு மற்றவர் மதிப்பளித்தல், மன்னிக்கும் தன்மை, உதவி செய்தல் என்பன இன்றியமையாத பண்புகளாகும்.
Fact 2 - Sex is only sex if it’s consensual
Without consent, sexual activity is sexual assault or rape. Before being sexual with someone, you need to know if they want to be sexual with you too. It’s important to be honest with your partner about what you want and don’t want.
2වන කරුණ - ලිංගික හැසිරීමකදී අනෙකාගේ කැමැත්ත ලබාගත යුතුය
එකඟතාවකින් තොර ලිංගික ක්රියාකාරකම් යනු ලිංගික අතවරයට හෝ දූෂණයට ලක් කිරීමකි. කෙනෙකු සමග ලිංගිකව හැසිරීමට පෙර, එම පුද්ගලයාට ද තමා සමග ලිංගිකව හැසිරීමේ ඕනෑකම තිබේදැයි ඔබ දැනගත යුතු වේ. ඔබ කැමති-අකමැති දෑ ගැන ඔබේ සහකරුට හෝ සහකාරියට අවංක වීම වැදගත් වේ.
உண்மை 2 – சம்மதத்துடனான பாலுறவு மட்டுமே பாலுறவு
சம்மதம் இல்லாத பாலியல் செயற்பாடு பாலியல் வன்புணர்வாக கருதப்படுகின்றது. நீங்கள் ஒருவருடன் பாலுறவு கொள்வதற்கு முன்னர் அவருக்கும் அதில் விருப்பம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பமானது என்ன விருப்பமற்றது என்ன என்பதை உங்கள் துணைவரிடம் நேர்மையாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.
Fact 3 - Consent is reversible
Consent is not set in stone. Anyone can change their mind about what they feel like doing, anytime. Even if you’ve done it before. You’re allowed to say “stop” at any time, and your partner needs to respect that.
3වන කරුණ - කැමැත්ත යනු වෙනස් කළ හැකි දෙයකි
කැමැත්ත ලබාදීම යනු ගලේ කෙටූ දෙයක් නොවේ. තමන් කරන්නට කැමති යමක් ගැන තම අදහස ඕනෑම වේලාවක වෙනස් කිරීමේ හැකියාව සැමට ඇත. එය, මීට පෙර ඔබ විසින් සිදු කළ ක්රියාවක් වන්නට ද පුළුවන. ‘නතර කරන්න’ කියා ඕනෑම අවස්ථාවක දී කියා සිටීමේ හැකියාව ඔබට ඇති අතර, ඔබේ සහකරු හෝ සහකාරිය ඊට ගරු කළ යුතු වේ.
உண்மை 3 – சம்மதத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்
சம்மதம் என்பது கல்லின் மேல் எழுத்து அல்ல. ஒருவர் தான் செய்ய விரும்புவது என்ன என்பது குறித்து எந்த நேரத்திலும் மனதை மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் முன்னர் அவ்வாறு செய்திருந்தால்கூட, எந்த நேரத்திலும் நிறுத்தச் சொல்லலாம். உங்கள் துணைவர் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.
Fact 4 - Being pressured to say yes is not consent
If you feel like you have to say yes to avoid problems in your relationship, or because you want to keep up with your friends, that is not consent. True consent is freely-given and enthusiastic. You should only do things you want to do, not because you feel like something is expected.
4වන කරුණ - පීඩනය හේතුවෙන් එකඟවීම යනු කැමැත්ත ලබාදීමක් නොවේ
ඔබේ සබඳතාව තුළ ඇතිවිය හැකි ගැටුලුකාරී තත්ත්වයන් මගහැරීමට හෝ ඔබේ මිතුරු මිතුරියන් හා සමාන වීම පිණිස ඊට කැමති විය යුතු ය යන හැඟීම, කැමැත්ත ලබාදීමක් නොවේ. සැබෑ කැමැත්ත ලබාදීම යනු, නිදහස් මනසින් හා උද්යෝගයෙන් ලබාදෙන කැමැත්තයි. ඔබ කළ යුත්තේ ඔබ කරන්නට කැමැති දෑ පමණි. තමන්ගෙන් යමක් බලාපොරොත්තු වන නිසා යැයි සිතා ඔබ අකමැති දෙයක් කළ යුතු නොවේ.
உண்மை 4 – பலவந்தப்படுத்தி இணங்கவைப்பது சம்மதம் அல்ல
உங்கள் உறவில் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அல்லது உங்கள் நட்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாலுறவுக்கு இணங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், அது சம்மதமாகாது. உண்மையான சம்மதம் என்பது எவ்வித கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுதந்திரமாகவும், விருப்பத்துடனும் வழங்கப்படுவதாகும். உங்களுக்கு விருப்பமான காரியங்களை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நீங்கள் எதையும் செய்யக்கூடாது.
Fact 5 - You can have a STI without symptoms
STIs (Sexually Transmitted Infections) are infections that spread from one person to another, usually during vaginal, anal, and oral sex. They’re common, and lots of people who have them don’t have any symptoms. Without treatment, STIs can lead to serious health problems including subfertility but most STIs are easy to treat so regular testing and practicing safe sex will keep you and your partner/s safe.
5වන කරුණ - රෝග ලක්ෂණ නොපෙන්වන STI තත්ත්වයක් ඔබට තිබිය හැකියි
STIs (ලිංගිකව සම්ප්රේෂණය වන ආසාදන) යනු, සාමාන්යයෙන් යෝනිය, ගුදය සහ මුඛය පාදක කරගත් සංසර්ග ක්රම මගින් එක් අයෙකුගෙන් තවත් අයෙකුට බෝ විය හැකි ආසාදන ය. ඒවා සුලබ නමුත් බොහෝ ආසාදිතයන් වෙතින් කිසිදු රෝග ලක්ෂණයක් පෙන්නුම් නොකෙරෙයි. අවශ්ය ප්රතිකාර නොකළහොත්, මඳසරු භාවය ඇතුළු බරපතල සෞඛ්යමය ගැටුලු වලට එය හේතු විය හැකියි. නමුත්, STIs බොහොමයක් පහසුවෙන් ප්රතිකාර කළ හැකි ඒවා බැවින්, නිතර නිතර පරීක්ෂාවන්ට යොමුවීම සහ ලිංගිකව හැසිරීමේ ආරක්ෂිත ක්රම අනුගමනය කිරීම මගින් ඔබ සහ ඔමේ සහකරු(සහකරුවන්) /සහකාරිය (සහකාරියන්) එවැනි ආසාදන වලින් ආරක්ෂාව වනු ඇත.
உண்மை 5 – அறிகுறிகள் இல்லாமலே உங்களுக்கு பாலியல் தொற்றுக்கள் இருக்கலாம்
பாலியல் தொற்றுக்கள் வழமையாக யோனி, குதம் மற்றும் வாய்மூல பாலுறவினால் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரப்பப்படும் தொற்றும் நோய்களாகும். இவை பொதுவானவை மற்றும் இத்தொற்றுக்கள் காணப்படும் பலருக்கு எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாலியல் தொற்றுக்களின் விளைவாக கருவுறாமை உள்ளிட்ட பாரதூரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். எனினும், பெரும்பாலான பாலியல் தொற்றுக்களை இலகுவாகக் குணப்படுத்த முடியும் என்பதால், கிரமமாகப் பரிசோதனை செய்வதும் பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்வதும் உங்களினதும் உங்கள் துணைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
Fact 6 - Consent is specific
Saying yes to one thing doesn’t mean you’ve agreed to anything beyond that. For example, if you agree to go to the bedroom to kiss, that doesn’t mean you’ve agreed to have sex as well.
6වන කරුණ - කැමැත්ත නිශ්චිතය
යමක් කිරීමට කැමැත්ත ලබාදීම යනු, ඊට එහා ගිය යමක් කිරීමට කැමැත්ත ලබාදීමක් නොවේ. උදාහරණයක් වශයෙන් සිප ගැනීම සඳහා නිදන කාමරයකට යන්නට ඔබ එකඟ වූයේ නම්, ලිංගික හැසිරීමක් සඳහාත් ඔබ එකඟ වූ බවක් එයින් අදහස් නොවේ.
உண்மை 6 – சம்மதம் குறித்துரைக்கப்பட்ட விடயத்திற்கு மட்டுமானது
நீங்கள் ஒரு விடயத்திற்கு “ஆம்” என்று சொன்னால், அதற்கு அப்பாற்பட்ட வேறேதும் விடயத்திற்கும் நீங்கள் இணங்கியதாகக் கொள்ள முடியாது. உதாரணமாக, முத்தமிடுவதற்காகப் அறைக்குள் செல்ல நீங்கள் இணங்கியிருந்தால், பாலுறவு கொள்வதற்கும் நீங்கள் இணங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
Fact 7 - Consent is based on trust
When your partner gives you their consent, they are trusting you. For example, if someone says they’ll use a condom and then they don't, there isn’t full consent. Or vice versa if someone says they’re on birth control but aren’t using any form of contraception, there isn’t full consent.
7වන කරුණ - කැමැත්ත ලබාදීමේ පදනම, විශ්වාසයයි
ඔබේ සහකරු හෝ සහකාරිය සිය කැමැත්ත ඔබට ලබාදෙන්නේ, ඔබ කෙරෙහි විශ්වාසය තබමිනි. උදාහරණයක් වශයෙන්, උපත්-පාලන කොපුවක් යොදා ගන්නට කෙනෙකු කැමැත්ත පළ කරන නමුත් එසේ නොකරයි නම් එහි පූර්ණ කැමැත්ත ලබාදීමක් නොමැත. අනෙක් අතට, තමන් ගැබ් ගැනීම් වළක්වන යම් ක්රමවේදයක් අනුගමනය කරන අයෙකු යැයි පවසන කෙනෙකු එවැනි ගැබ් ගැනීම් වළක්වන කිසිදු ක්රමවේදයක් අනුගමනය කරන්නෙකු නොවේ නම්, එහි පූර්ණ කැමැත්ත ලබාදීමක් නොමැත.
உண்மை 7 – சம்மதம் நம்பிக்கையின் அடிப்டையிலானது
உங்கள் துணைவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்போது உங்களில் நம்பிக்கை வைத்தே அவ்வாறு செய்கின்றார். உதாரணமாக, ஆணுறை (Condom) பாவிப்பதாகக் கூறும் ஒருவர் அவ்வாறு செய்யாவிட்டால் அங்கு பூரண சம்மதம் இல்லை. மறுபக்கத்தில், ஏதேனும் கருத்தடை முறையைப் பயன்படுத்துவதாகக் கூறும் ஒருவர் அவ்வாறு செய்யாவிட்டாலும் அங்கே பூரண சம்மதம் இல்லை.
Fact 8 - Consent is not implied
You can’t assume someone consents to any sexual activity based on their past behaviour, clothes, or where they go. Sexual consent is always clearly communicated. Silence is not consent.
8වන කරුණ - කැමැත්ත ලබාදීම යනු ඇඟවීමක් නොවේ
යම් අයෙකුගේ අතීත චර්යාවන්, ඇඳුම්-පැළඳුම්, හෝ ඔවුන් යන-එන තැන් ආදිය, ලිංගික හැසිරීමකට එම පුද්ගලයා තමාට කැමැත්ත දුන් බවට අනුමාන කිරීමට ඔබට ලබා දෙන හේතුසාධක නොවේ. ලිංගික කැමැත්ත ලබාදීම යනු සෑම විටෙකම පැහැදිලි සන්නිවේදනයකි. නිශ්ශබ්දතාව යනු කැමැත්ත ලබාදීමක් නොවේ.
உண்மை 8 – சம்மதத்தை ஊகித்து அறிய முடியாது
ஒருவர் தனது கடந்தகால நடத்தை, உடைகள் அல்லது அவர் செல்லுமிடத்தின் அடிப்படையில் ஏதேனும் பாலியல் செயற்பாட்டிற்கு இணங்குவார் என்று நீங்கள் அனுமானிக்க முடியாது. பாலுறவுக்கான சம்மதம் எப்போதுமே தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். மௌனம் சம்மதத்திற்கு அடையாளமல்ல.
Fact 9 - You can’t consent if you’re under 16
The legal age of consent in Sri Lanka is 16. If you’re under 16 years of age you are legally (and emotionally and psychologically) not capable of consenting to any sexual activity. Adults (18 and older) who have sex with someone younger than the age of consent can face prosecution and imprisonment.
9වන කරුණ - ඔබ අවු. 16ට අඩු වයසේ නම්, ඔබට කැමැත්ත ලබාදිය නොහැකියි
කැමැත්ත ලබාදීම සඳහා ශ්රී ලිංකාවේ නීත්යානුකූල වයස ලෙස සලකන්නේ අවුරුදු 16 වේ. ඔබ වයස අවුරුදු 16ට අඩු නම්, නීත්යානුකූලව කිසිදු ලිංගික ක්රියාකාරකමක් සඳහා කැමැත්ත ලබාදීමට ඔබට (හැඟීමකින් යුතුව හෝ මානසිකව) නොහැක. කැමැත්ත ලබාදීමේ වයසට අඩු වයසේ පසුවන යම් අයෙකු සමග ලිංගිකව හැසිරෙන වැඩිහිටියන් (18 සහ ඊට වැඩි) හට, නඩු පැවරීම් හෝ සිරගත වීම් වලට මුහුණපෑමට සිදුවිය හැකියි.
உண்மை 9 – நீங்கள் 16 வயதிற்குக் கீழ்ப்பட்டவராயின் பாலுறவுக்குச் சம்மதிக்க முடியாது
இலங்கையில் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கக்கூடிய சட்டபூர்வ வயது 16 ஆகும். நீங்கள் 16 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால், சட்ட ரீதியாகவும் (உணர்வு மற்றும் உளவியல் ரீதியாகவும்) எவ்வித பாலியல் செயற்பாட்டிற்கும் சம்மதம் தெரிவிக்க முடியாது. சம்மதம் தெரிவிக்கச் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட வயதிற்குக் குறைந்த ஒருவருடன் பாலுறவில் ஈடுபடும் வளர்ந்தவர்கள் (18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) சட்ட நடவடிக்கை மற்றும் சிறைத்தண்டனைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
Fact 10 - There’s nothing wrong with being single /or not having sex
There’s nothing wrong with not having a partner or not engaging in sexual activity. There’s no age limit or timeline to experience a loving relationship (if you want to). Don’t be pressured into anything you don’t want to do.
10වන කරුණ - තනිව ජීවත්වීම/හෝ ලිංගික හැසිරීම් වල නොයෙදීම අසාමාන්ය දෙයක් නොවේ
තමන්ට සහකරුවකු හෝ සහකාරියක නොසිටීම හෝ ලිංගික ක්රියාකාරකම් වල නොයෙදී සිටීම යනු අසාෙමාන්ය දෙයක් හෝ වරදක් හෝ නොවේ. ආදරණීය සබඳතාවක් භුක්ති විඳින්නට (ඔබට ඕනෑකමක් ඇත්නම්) වයස් සීමාවක් හෝ කාලසීමාවක් හෝ නොමැත. ඔබ කරන්නට කැමති නැති දෙයක්, යම් බලපෑමක් නිසා වුවද කළ යුතු නැත.
உண்மை 10 – தனியாக அல்லது பாலுறவுகொள்ளாமல் இருப்பதில் தவறேதுமில்லை
துணைவர் இல்லாமல் அல்லது பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதில் எவ்வித தவறுமில்லை. (நீங்கள் விரும்பினால்) காதல் உறவை அனுபவிப்பதற்கு வயதெல்லையோ காலவரிசையோ கிடையாது. நீங்கள் விரும்பாத எதனையும் பலவந்தத்தின் பேரில் செய்ய வேண்டாம்.
Fact 11 - Safe sex is better sex
Safe sex means protecting yourself and your partner/s from unintended pregnancy and/or STIs by using a condom correctly and consistently. Protecting each other shows you care. Talk openly to your partner about contraception, condoms and STI tests to enjoy worry-free sex.
11වන කරුණ - ආරක්ෂිත ලිංගික හැසිරීම් යනු වඩා හොඳ ලිංගික හැසිරීම් ය
ආරක්ෂිත ලිංගික චර්යාවන් යනු, නිවැරදිව සහ නිරන්තරයෙන්ම පවුල් සැලසුම් කොපු භාවිතය මගින් ඔබ සහ ඔබේ සහකරු/සහකරුවන්, සහකාරිය/සහකාරියන් අනපේක්ෂිත ගැබ් ගැනීම් සහ/හෝ STIs වෙතින් ආරක්ෂා කිරීමයි. කනස්සලකින් තොරව ලිංගික සුව විඳින්නට, පවුල් සැලසුම් ක්රමවේද සහ STI පරීක්ෂණ ආදිය ගැන ඔබේ සහකරු හෝ සහකාරිය සමග විවෘතව කතා කරන්න.
உண்மை 11 – பாதுகாப்பான பாலுறவே சிறந்த பாலுறவு
ஆணுறை (Condom) ஒன்றை சரியான முறையிலும் கிரமமாகவும் பாவிப்பதன் மூலம் தேவையற்ற கருத்தரிப்பு மற்றும்/அல்லது பாலியல் தொற்றுக்களிலிருந்து உங்களையும் உங்கள் துணைவரையும் பாதுகாத்துக்கொள்வதே பாதுகாப்பான பாலுறவு ஆகும். ஒருவரையொருவர் பாதுகாப்பது உங்கள் கரிசனையை எடுத்துக்காட்டும். கவலையற்ற பாலுறவை அனுபவிப்பதற்கு கருத்தடை, ஆணுறைப் பாவனை மற்றும் பாலியல் தொற்றுகளுக்கான பரிசோதனைகள் குறித்து உங்கள் துணைவருடன் வெளிப்படையாக பேசுங்கள்.
Fact 12 - Abuse is not always obvious
An abusive relationship is not limited to physical abuse. Sexual abuse, verbal abuse, emotional abuse, financial abuse, controlling behaviour, reproductive control, threats and intimidation and isolation are all forms of abuse and should never be tolerated in a relationship. If you are facing any form of abuse reach out to the National Women’s Helpline: 1938 or the Mithuru Piyasa hotline: 070 26 11 111
12වන කරුණ - හිිංසනය සැමවිටම පිටතට නොපෙනේ
හිිංසාකාරී සබඳතා, ශාරීරික හිිංසනයට පමණක් සීමා වූවක් නොවේ. ලිංගික හිිංසනය, වාචික හිිංසනය, චිත්තවේගී හිිංසනය, මූල්ය හිිංසනය, යටත් කරගැනීමේ චර්යාවන්, ප්රජනක පාලනය, තර්ජන සහ තැති ගැන්වීම සහ තනිකිරීම ආදිය සියුලු ආකාරයන්ගේ හිිංසනයන් වන අතර, සබඳතාවක දී ඒ කිසිවක් ඉවසා සිටිය යුතු නැත. කිසියම් හෝ ආකාරයක හිිංසනයකට ඔබ ලක්ව සිටියි නම්, ජාතික කාන්තා උපකාරක දුරකථන සේවාව: 1938 හෝ මිතුරු පියස ක්ෂණික ඇමතුම් අංකය: 070 26 11 111 ඔස්සේ සහය පතන්න.
உண்மை 12 – துஷ்பிரயோகம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக தெரிவதில்லை
துஷ்பிரயோகமான உறவு என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமல்ல. பாலியல் துஷ்பிரயோகம், வாய்மொழி துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், நிதி ரீதியான துஷ்பிரயோகம், கட்டுப்படுத்தும் நடத்தை, இனப்பெருக்கக் கட்டுப்பாடு, அச்சுறுத்தல், மற்றும் மிரட்டல், தனிமைப்படுத்தல் ஆகிய அனைத்துமே துஷ்பிரயோகங்கள் ஆகும். ஓர் உறவில் அவற்றிற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாது. நீங்கள் ஏதேனும் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்தால், 1938 என்ற இலக்கத்தினூடாக தேசிய மகளிர் உதவிச் சேவையுடன் அல்லது 070 26 11 111 என்ற இலக்கத்தினூடாக மித்துரு பியசவுடன் தொடர்புகொள்ளுங்கள்.
Fact 13 - Sharing nudes without consent is a crime
Sending your partner a nude picture of yourself is not a crime. Sharing your partner’s intimate pictures with anyone else or threatening to do so IS a crime and can lead to imprisonment. If you are facing such abuse call the National Women’s Helpline: 1938 or the Mithuru Piyasa hotline: 070 26 11 111
13 වන කරුණ - කැමැත්තකින් තොරව නිරුවත් ඡායාරූප අන් අය හා බෙදා-හදා ගැනීම සාපරාධී ක්රියාවකි
ඔබේ සහකරු හෝ සහකාරිය වෙත ඔබේ නිරුවත් ඡායාරූපයක් යැවීම සාපරාධී ක්රියාවක් නොවේ. ඔබේ සහකරුගේ හෝ සහකාරියගේ එවැනි ඡායාරූප වෙනත් කිසිවෙකු සමග බෙදා-හදා ගැනීම හෝ එසේ කරන බවට තර්ජනය කිරීම සාපරාධී ක්රියාවක් වේ. එසේම, එය සිර දඬුවමට ලක් කළ හැකි වරදකි. ඔබ එවැනි හිිංසනයකට ලක් ව සිටියි නම්, ජාතික කාන්තා උපකාරක දුරකථන සේවාව: 1938 හෝ මිතුරු පියස ක්ෂණික ඇමතුම් අංකය: 070 26 11 111 ඔස්සේ සහය පතන්න.
உண்மை 13 – சம்மதமின்றி நிர்வாணப் படங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் ஒரு பாரிய குற்றம்
உங்கள் நிர்வாணப் படத்தை உங்கள் துணைவருக்கு அனுப்புதல் ஒரு குற்றச்செயல் அல்ல. ஆனால், உங்கள் துணைவரின் அந்தரங்கப் படங்களை வேறொருவருக்கு அனுப்புவது அல்லது அனுப்பப்போவதாக மிரட்டுவது குற்றச்செயலாகும். இக் குற்றச்செயலுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். நீங்கள் இவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்தால், 1938 என்ற இலக்கத்தினூடாக தேசிய மகளிர் உதவிச் சேவையுடன் அல்லது 070 26 11 111 என்ற இலக்கத்தினூடாக மித்துரு பியசவுடன் தொடர்புகொள்ளுங்கள்.
Fact 14 - A good relationship with a safe and satisfying sex life takes work
Connecting with someone emotionally, romantically and physically is great but it takes a lot more than an initial connection to build a good relationship with a safe and satisfying sex life. Knowing yourself first and what your boundaries are is important, trust and honesty with open communication about likes, dislikes, boundaries, contraception, STI history and testing will all help you and your partner build a strong, safe and satisfying relationship.
14 වන කරුණ - ආරක්ෂිත සහ තෘප්තිමත් ලිංගික ජීවිතයක් සහිත මනා සබඳතාවක් වෙනුවෙන් කැපවීමෙන් කටයුතු කළ යුතුයි
යම් අයෙකු සමග හැඟීමකින් යුතුව, ගෘංගාරාත්මකව සහ ශාරීරිකව සම්බන්ධ වීම සුන්දර දෙයක් වුවත්, ආරක්ෂිත සහ තෘප්තිමත් ලිංගික ජීවිතයක් සහිත මනා සබඳතාවක් ඇති කරගැනීම උදෙසා මූලීක වශයෙන් සම්බන්ධ වනවාට වැඩි යමක් සිදුවිය යුතුය. ඔබ පළමුවෙන්ම ඔබ ගැන දැන සිටීම සහ ඔබේ සීමා - මායිම් මොනවාදැයි හැඳින ගැනීම වැදගත් වේ. එසේම, කැමති-අකැෙමති දෑ, සීමාවන්, පවුල් සැලසුම් ක්රමවේද, STI ඉතිහාසය සහ පරීක්ෂණ ආදිය ගැන විශ්වාසයෙන් සහ අවංක භාවයෙන් යුතු විවෘත කතා-බහ යනාදිය ඔබට සහ ඔබේ සහකරු හෝ සහකාරියට ශක්තිමත්, ආරක්ෂිත සහ තෘප්තිමත් සබඳතාවක් ගොඩනැගීමට උපකාරී වනු ඇත.
உண்மை 14 – பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கை கொண்ட ஒரு சிறந்த உறவுக்கு முயற்சி அவசியம்
எவரேனுமொருவருடன் உணர்வு ரீதியாக, காதல் ரீதியாக மற்றும் உடல் ரீதியாக தொடர்புகொள்வது மிகவும் நல்லதே. எனினும், ஆரம்பத் தொடர்பு மட்டும் போதாது. பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையுடன் ஒரு சிறந்த உறவைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றியும் உங்கள் வரம்பெல்லைகள் பற்றியும் அறிந்துகொள்வது முக்கியம். விருப்பு வெறுப்புகள், வரம்பெல்லைகள் கருத்தடை முறைகள், பாலியல் தொற்றுக்களின் வரலாறு மற்றும் பரிசோதனை முதலியன குறித்து பரஸ்பர நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் திறந்த மனதுடனும் உரையாட வேண்டும். இவையனைத்தும் வலுவான பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான உறவைக் கட்டியெழுப்ப உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் உதவும்.
Happy Valentine's Day!
ආදරවන්තයින්ගේ දිනය වෙනුවෙන් ඔබට සුභපැතුම්!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!